தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தஞ்சை கோயிலின் குடமுழுக்கை தமிழில் நடத்தாவிட்டால் போராட்டம்’ - Thanjavur Kumbhabhishekham news

தஞ்சாவூர்: வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழில் நடத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

velmurugan
velmurugan

By

Published : Jan 24, 2020, 2:12 PM IST

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழில்தான் நடத்த வேண்டும். தமிழில் நடத்தப்படாத பட்சத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், இந்து சமய அறநிலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களது கோரிக்கையை வலியுறுத்துவோம். தேவைப்பட்டால் தமிழில் அர்ச்சனை செய்வோம் என்ற அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.

விவசாயிகளின் பொதுமக்களின் அனுமதியில்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்துவோம் எனக் கூறியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. இதை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு திரும்பப் பெறும் வகையில், தமிழ்நாடு அரசும் அழுத்தம் தர வேண்டும்.‌

வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்

ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசின் தீர்மானத்தில் முடிவு எடுக்காமல் ஆளுநர் தான்தோன்றித்தனமாக முடிவெடுக்க நினைக்கிறார். சட்டத்தை ஏற்காத ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

எந்த மாநிலமும் நடைமுறைப்படுத்தாத 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்துவதை ஏற்க முடியாது தமிழ்நாடு அரசு இதை ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: 'பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்தவேண்டும்' - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details