தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம் - Thanjavur to thirukattupalli

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளியில் ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tamizhaga Makkal Munnetra Kazhagam protest in Tanjore
Tamizhaga Makkal Munnetra Kazhagam protest in Tanjore

By

Published : Aug 24, 2020, 6:11 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தியாக காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பூதலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் சாமிகண்ணு வரவேற்றார், ஒன்றிய கழக தலைவர் அழகுமலை முன்னிலை வகித்தார்.

தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கபில்தேவ், ஒன்றிய விவசாய அணி தலைவர் குல பால்ராஜ், கழக ஒன்றிய செயலாளர் சுகுமாரன், தொண்டரணி ஒன்றிய தலைவர் விக்னேஷ், ஒன்றிய இணைச் செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் வேலுமணி நன்றி கூறினார். இதில் சுற்றுவட்டார இளைஞர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details