சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் உலோக ஆய்வு பிரிவில் குறுகிய கால பணிக்காக, மூன்று மாத கால அடிப்படையில் தமிழ்நாட்டிலிருந்து கடந்த ஜனவரி மாத இறுதியில் 150 தொழிலாளர்கள் சென்றனர். அவர்களது பணி ஏப்ரல் 15ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் ஊரடங்கின் காரணமாக விமான சேவை இல்லாத காரணத்தினால், நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
நாடு திரும்ப உதவி செய்யுங்கள்- சவுதியில் தவிக்கும் தொழிலாளர்கள் - tamilnadu labours stuck in saudi arabia
தஞ்சாவூர்: தாங்கள் நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சவுதியில் தவிக்கும் தொழிலாளர்கள்
இத்தனை நாள்களாக தங்களது சொந்த பணத்திலேயே செலவு செய்து சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது பணம் ஏதும் இல்லாததால் பசியில் வாடுவதாகவும், அவர்கள் வேலை பார்த்து வந்த நிறுவனம் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றாமல் கை விரித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் சொந்த நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் பார்க்க: நாய் கடித்து உயிருக்கு ஊசலாடிய நாகப்பாம்பு: அறுவை சிகிச்சை வெற்றி!