தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் காமராஜ், ' மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் மழையின் காரணமாக வெங்காயம் வரத்து குறைவதனால் விலையேற்றம் அதிகமாக உள்ளது. இன்னும் சில வாரங்களில் வெங்காயத்தின் விலை சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் வெங்காய இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் துருக்கி மற்றும் எகிப்து நாடுகளிலிருந்து 1 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு; டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள 5000க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.