தஞ்சாவூர்: காசியில் நடைபெறும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 216 மாணவர்களுடன் புறப்பட்ட முதல் ரயிலினை கும்பகோணத்தில் வரவேற்க வந்த அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
வரும் 19ஆம் தேதி காசியில் நடைபெறும் 'தமிழ் சங்கமம்' என்ற நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதற்காகப் பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் காசிக்கு செல்கிறார்கள். முதல் கட்டமாக சென்னையில் இருந்து 216 மாணவர்கள் காசிக்கு செல்கிறார்கள் என்றும், அந்த வழியனுப்பு நிகழ்வில் மாநில ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.