தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலக்கடலையை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை - சம்பா பயிர்களுக்கு உடனடியாக இழப்பீட்டு தொகை

நிலக்கடலையை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும்; மேலும் நிலக்கடலை விதையை அரசே வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 17, 2023, 11:01 PM IST

நிலக்கடலையை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இதில் விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை அறுவடை செய்யக்கூடிய இயந்திரங்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை ஒரு விவசாயிகளுக்கு கூட மானியம் வழங்கப்படவில்லை.

இதனால் அறுவடை செய்யும் போது விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே அறுவடை இயந்திரத்திற்கான 50% மானியத்தையும் உடனே வழங்க வேண்டும் எனவும், மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு மாற்றாக கடலை சாகுபடி செய்ய சொல்லி வேளாண்மை துறை தெரிவித்தனர். அதன்படி திருவோணம் ஒன்றியம் சாமி விடுதி, காடுவெட்டி விடுதி ஆகிய கிராமங்களில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளோம்.

ஆனால், நிலக்கடலை விதை கிடைக்காமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 37 கிலோ 4500 முதல் 5000 ரூபாய்க்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் தற்போது கடலை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைபெறுகிறது. ஆனால் இந்த நிலக்கடலையை தனியாரிடம் விற்கும்போது அவர்கள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாகவும், எனவே நிலக்கடலையை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பணி நியமன முறைகேடு; நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details