தஞ்சையை அடுத்த நாஞ்சிகோட்டையில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு விளையாட்டு உபகரணங்களை இளைஞர்களுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல் தாமும் கிரிக்கெட் விளையாடி உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "விவசாயிகளுக்கு வேண்டிய தொகுப்புகளையும், நிதியையும் மானியம் வழங்கியதால் இன்றைக்கு விவசாயம் செழித்தோங்கி, விளைச்சல் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தற்போது அறுவடை நடந்துகொண்டிருக்கிறது.