தாட்கோ எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ஆதிதிராவிடர் மக்கள் சமூக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமென்ற அடிப்படையில் அவர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்காக ரூ.1.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரையிலான கடனுதவிக்கு 30 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டுத்திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவக் கூடங்கள் அமைப்பதற்கான திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம், இந்தியக் குடிமைப் பணி, தமிழ்நாடு தேர்வாணைய பணிகளுக்கான முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கர், செலவு கணக்கர், நிறுவன செயலருக்கான நிதியுதவி, மகளிர் தையல் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கான நிதியுதவி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.