தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜ ராஜ சோழனின் பள்ளிப்படை குறித்து நீங்காத மர்மங்கள்.. வரலாற்று ஆய்வாளர் கூறுவதென்ன? - குறித்து நீங்காத மர்மங்கள்

Raja Raja Cholan Sadhaya vizha: தமிழகம் முழுவதும் "ராஜராஜ சோழனின் சதய விழா" நாளை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால், அவரின் நினைவிடம் எங்கு இருக்கிறது? உடையாளூரில் இருப்பது தான் அவரது நினைவிடமா? என்ற கேள்விக்கு வரலாற்று ஆய்வாளர்களின் பதில்களுடன் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 9:08 PM IST

Updated : Oct 23, 2023, 9:14 PM IST

சென்னை:தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் 'ராஜ ராஜ சோழனின் 1038-வது சதய விழா' இம்மாதம் 24, 25-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஆனால், ராஜ ராஜ சோழனின் நினைவிடம் எங்கு உள்ளது? என கேள்வி மக்கள் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கிறது. 'மன்னர்' என்றால், 'ராஜ ராஜன் சோழன்' என்றுதான் மக்கள் மனதில் ஞாபகம் வரும். மேலும், இந்தியாவில் பல்வேறு இடங்களில் அவர் போர் புரிந்தும், தோல்வியை காணாத மன்னர் என்ற பெருமைப் பெற்றவர். தற்போது, சில காலமாக மக்கள் மனதில், குறிப்பாக, தமிழர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் ராஜ ராஜ சோழனின் நினைவிடம் எங்கிருக்கிறது? எந்த இடத்தில் அமைந்து இருக்கிறது? எனப் பல புதிர்களும், மர்மங்களும், தொடர்ந்து வலம் வந்துக்கொண்டிருக்கின்றன.

ராஜராஜ சோழனின் சதய விழா

மேலும், அவரது மரணம் குறித்து பல வதந்திகள் ஒருபுறம் இருந்தாலும் விஜயாலய சோழன், ஆதித்த சோழன், ராஜேந்திர சோழன், கண்டராதித்த சோழன், சுந்தரச் சோழன் போன்ற சோழர்களின் 'பள்ளிப்படை' எனப்படும் நினைவிடங்கள் தற்போது கல்வெட்டு ஆதராங்கள் இருந்து வருகின்றன. ஆனால், ராஜ ராஜ சோழனின் நினைவிடம் எங்கு உள்ளது? என்று பல ஆண்டுகளாக தொடர்கிறது. இவரது நினைவிடம் கும்பகோணத்தில் இருந்து, சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள உடையாளூரில் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள், சோழர்கள் ஆய்வாளர்கள் ஆகியோரிடையே உள்ள அசைக்க முடியாத கருத்தாக உள்ளது. இருந்தாலும், பல்வேறு தரப்பினர் உடையாளூரில் இருப்பது, ராஜ ராஜ சோழனின் சமாதி இல்லை என்பது, மற்றொறு கருத்தாக இருந்து வருகிறது. மேலும், ராஜராஜ சோழனின் பள்ளிப்படை தஞ்சையில் தான் உள்ளது எனவும், மேலும், தஞ்சை கோயில் தான் அவரது பள்ளிப்படை என்ற கருத்தும், பரவலாக இருந்து வருகிறது.

தஞ்சாவூரில் ராஜராஜ சோழன் சதய விழா - விழாக்கோலம் பூண்ட 'பெரிய கோயில்'

இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் பொ.வேல்சாமி அவர்களை கேட்டப்போது, 'இந்தியா முழுவது போற்றத்தக்க பேரரசாக சோழர்களின் பேரரசு இருந்தது. மேலும், தமிழகத்திற்கே புகழ் சேர்க்கும் வகையில், உயர்ந்த விமானம் கொண்ட தஞ்சை "பெருவுடையார் கோயில்" சோழர்களைப் பற்றி பல்வேறு கல்வெட்டுகள் இருந்து வருகின்றன. மேலும், அந்த பெரிய கோயிலை கட்டியது "ராஜராஜ சோழன்" தான் என்று 1907ஆம் ஆண்டு வரை யாருக்கும் தெரியாது. தஞ்சை பள்ளியில் தான் தமிழாசிரியாராக, தமிழறிஞர் ஜி.யு.போப் இருந்துள்ளார். அவர் பல்வேறு திருக்குறள் உட்பட பல்வேறு நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஆனால், அவருக்கே தஞ்சை பெரிய கோயில் கட்டியது யார் என்று தெரியவில்லை. அவரின் ஒரு ஆய்வு நூலில் அவர், 'காடுவெட்டி சோழன்' ஒருவர்தான் இக்கோயிலை கட்டியது என்று கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ் தாத்தா உ.வே.சா.வும், தன் ஆய்வுகளில் மூலம் தமிழ் வளர்க்கப்பட்டது. ஆனால், அவருக்கும் தெரியாது.

ராஜ ராஜ சோழனின் பள்ளிப்படை எது?.. உடையாளூர் கல்லுவெட்டு கூறுவது என்ன?

ராஜராஜ சோழன் தான் இக்கோயிலை கட்டியது என்று, அதற்கு பின்னால் 1890-களில் வரும், ஹல்ட்ஸ் (Hultzsch) என வரும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குநராக இருந்தவர் தான், 1907ஆம் ஆண்டு தான் கண்டுபிடிக்கிறார். மேலும், அவர், அந்த கோயில் கல்வெட்டுகளை வைத்து, அவரின் நற்செயல்களை கண்டுப்பிடிக்கிறார். மேலும் அதன் பிறகு வந்த ஆய்வாளர்கள், சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து நூல்கள் எழுதினார்கள். அதோடு, 995-1013 ஆம் ஆண்டு இந்த 'பெரிய கோயில்' கட்டப்பட்டது என்று கல்வெட்டுகள் கூறின. ஆனால், அவரின் நினைவிடத்திற்கு, ஒரு கல்வெட்டுகள் கூட கிடைக்கவில்லை. இப்போது பெரும்பாலனோர் தற்போது, இருக்கும் உடையாளூரில் இருக்கும் அந்த இடத்திற்கு கல்வெட்டுகள் இல்லை, ஆதாராங்கள் இல்லை. அவரது நினைவிடத்திற்கு, இருக்கலாம் அபிப்பிராயங்கள் உள்ளன. தவிர, ஆதாரம் என்பது இல்லை' என்று தெரிவித்தார்.

பால்குளத்து அம்மன் கோயில் தூண்களில் உள்ள கல்வெட்டுகள் கூறுவதென்ன?

இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகையில், "முதலில் ராஜராஜ சோழன் பள்ளிப்படை அல்லது நினைவிடம் என்று கூறும் இடத்தை சில ஆய்வாளர்கள் அந்த ஊரில் இருக்கும் பாலகுளத்து அம்மன் கோயில் தூணில் உள்ள கல்வெட்டு தகவல் ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர். அந்த தூணில் இருக்கும் மொத்தம் 17 வரிகள் கொண்ட இக்கல்வெட்டில்,

"ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்திரண்டாவது ஸ்ரீ சிவபாதசேகர மங்கலத்து எழுந்தருளி நின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதசேகர தேவர் திருமாளிகை முன்பில் பெரிய திருமண்டப முன்பில் எடுப்பு ஜீநித்தமையில் இம்மண்டபம் எடுப்பித்தார்"

என்ற வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதை வைத்து தான் ராஜராஜ சோழன் பள்ளிப்படையோ அல்லது நினைவிடமோ தற்போது இருக்கும் இடத்தில் இருக்கும் 'லிங்கம்' தான் என்று குறிப்பிடுகின்றனர்.

இக்கல்வெட்டு ஏற்கெனவே, உடையாளூரிலுள்ள ஒரு பெருமாள் கோயிலில் இருந்ததாகவும், பின்னாளில் பால்குளத்து அம்மன் கோயில் கட்டுமானத்தின் போதோ? இல்லை, திருப்பணியின் போதோ? மண்டபத் தூணாக வைக்கபட்டுள்ளது என கூறப்படுகின்றன. எனவே, இக்கல்வெட்டு வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளதால், ராஜராஜ சோழனின் பள்ளிப்படை கோயில் எங்கிருந்தது என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. குறிப்பாக, ராஜ ராஜ சோழனின் முன்னோர்களுக்கு எல்லாம் பள்ளிப்படைகள் இருக்கின்றன. ஏன் இவருக்கு பின்னால் வந்த மன்னர்களுக்கும் இருந்து வருகின்றன.

பால்குளத்து அம்மன் கோயில் தூண்களில் உள்ள கல்வெட்டுகள் கூறுவதென்ன?

ஆனால், இவரது பள்ளிப்படை எங்கு உள்ளது? மேலும், இவர் எங்கு சென்று இருப்பார்? என்ற பல்வேறு Conspiracy theory-கள் வலம் வருகின்றன. ஏன் ராஜராஜ சோழனின் மனைவிகளில் ஒருவரான 'பஞ்சவன் மாதேவி' பள்ளிப்படைக் கோயில் குறித்த தகவல் கிடைக்கிறது. ஆனால், ராஜராஜ சோழன் பள்ளிப்படைக் கோயில் குறித்த தகவல் கிடைக்கவில்லை. பால்குளத்து அம்மன் கோயில் கல்வெட்டிலும் திருமண்டபம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை வைத்து ராஜராஜ சோழனின் பள்ளிப்படைக் கோயில் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது. மேலும் சிலர், தஞ்சை பெரிய கோயில் தான் அவரது பள்ளிப்படையாக இருக்க வாய்ப்புள்ளாதாக தெரிவித்தாலும் அதற்கான கல்வெட்டும், சரியான ஆதராங்கலும் இல்லாமல் நம்மால், முடிவுக்கு வரமுடியாது. ஆகையால் தற்போது, இருக்கும் பள்ளிப்படை என்று கூறும் இடத்திற்கு சரியான தகவல்கள் இல்லை என்று விளக்கியுள்ளார்.

இதையும் படிங்க:ஆயுத பூஜை: கோவை உதயமரத்து கருப்பராயர் கோயிலில் குவியும் வாகனங்கள்!

Last Updated : Oct 23, 2023, 9:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details