தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டுமனை வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு -கிராம வளர்ச்சி மக்கள் இயக்கம் அறிவிப்பு - தஞ்சை

தஞ்சை: பட்டுக்கோட்டை அருகில் உள்ள தாமரங்கோட்டை வடக்கு வருவாய் கிராமத்தில் அரசுத் துறை நிர்வாகமான வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை ஆகியவை பொதுமக்களின் கோரிக்கைகளை புறக்கணித்து வருவதால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் வளர்ச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.

வீட்டுமனை வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு-கிராம வளர்ச்சி மக்கள் இயக்கம் அறிவிப்பு

By

Published : Apr 11, 2019, 7:24 AM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழ்நாடு அரசியல் கட்சிகள் போட்டா போட்டி போட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள தாமரங்கோட்டை வடக்கு வருவாய் கிராமத்தில் அரசு துறை நிர்வாகமான வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை ஆகியவை பொதுமக்களின் கோரிக்கையை புறக்கணித்து வருவதால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கிராம மக்கள் வளர்ச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கிராம மக்கள் வளர்ச்சி இயக்க பொறுப்பாளர் ராஜலிங்கம் கூறுகையில், "கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு, இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வீட்டுமனை இல்லா ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் வளர்ச்சி இயக்கம் என்று ஒருங்கிணைந்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

வீட்டுமனை வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு-கிராம வளர்ச்சி மக்கள் இயக்கம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details