தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தாண்டு - தமிழ்க்கடவுள் சுவாமிமலை முருகன் ஆலயத்தில் திருப்படி பூஜை! - கோபகிருது வருடம்

சுவாமிமலை முருகன் கோயிலில் இன்று, தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி சிறப்பு திருப்படி பூஜை நடைபெற்றது.

சுவாமிமலையில் சிறப்பு திருப்படி பூஜை!
சுவாமிமலையில் சிறப்பு திருப்படி பூஜை!

By

Published : Apr 14, 2023, 5:23 PM IST

சுவாமிமலையில் சிறப்பு திருப்படி பூஜை!

தஞ்சாவூர்:முருகனின் அறுபடை வீடுகளில் 4ஆம் படை வீடாக கருதப்படும், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது.

பிரபவ முதல் அட்சய வரையிலான 60 தமிழ் வருட தேவதைகள், 60 படிக்கட்டுகளாக இருந்து இந்தக் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சேவை செய்வதாக நம்பிக்கைக் கொண்டதும், கட்டுமலை கோயிலான இந்தக் கோயிலில்தான் முருகன், தன் தந்தை சிவபெருமானுக்கு 'ஓம்' எனும் பிரணவ மந்திரப் பொருளை குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்ற பெருமையும் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சுவாமிக்கே (சிவபெருமானுக்கே) நாதன் (குருவானதால்) ஆனதால், இந்தக் கோயிலில் உள்ள முருகன் சுவாமிநாத சுவாமி என அழைக்கப்படுவதாக கருதப்படுகிறது. அதேபோல் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறந்ததாகவும், நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்றதும் எனப்பெருமை கொண்டது, இந்தக் கோயில்.

இத்தகைய சிறப்புபெற்ற சுவாமிமலையில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளான தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, 60 திருப்படிகளுக்கும் சிறப்பு திருப்படி பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழ் ஆண்டுகளின் 37ஆவது ஆண்டான சோபகிருது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 14) முருகனுக்கு உரிய தமிழ் மறை நூல்களை தலையில் சுமந்த நிலையில், 60 திருப்படிகளிலும் குத்துவிளக்கு ஏற்றி வைத்த சிவாச்சாரியார்கள், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து விசேஷ பூஜைகளை செய்தனர்.

பின்னர் பஞ்ச ஆர்த்தி செய்ய திருப்படி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருக்கோயில் துணை ஆணையர் உமாதேவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கட்டுமலை கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் மூலவர் சுவாமிநாத சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் திருவிளக்குகள் ஏற்றி வைத்தும், அர்ச்சனைகள் செய்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:தமிழ்ப் புத்தாண்டு - 6 கோடி ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு அலங்காரம்!

ABOUT THE AUTHOR

...view details