தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலையில் இருந்து கும்பகோணத்திற்கு நாள்தோறும் மினி பேருந்து ஒன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டுவந்தது. இந்த பேருந்து வழக்கம்போல் இன்று சுவாமி மலையில் இருந்து கும்பகோணத்திற்கு புறப்பட்டு சென்றது. சுவாமி மலை அடுத்த ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது திடீரென மினி பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதைப் பார்த்த பயணிகள் அலறியடித்து பேருந்தில் இருந்து இறங்கி ஒடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
சுவாமி மலை அருகே நடுவழியில் தீ பிடித்து எரிந்த மினி பேருந்து - flames at the minibus
தஞ்சாவூர்: சுவாமி மலை அருகே நடுவழியில் பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீப்பிடித்து எரிந்த பேருந்தை அணைக்கும் தீயணைப்பு துறையினர்
தீப்பற்றியதை அறிந்த பயணிகள் உடனடியாக பேருந்தில்இருந்து இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீப்பற்றியது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.