தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் ஆக்ஸிஜன் வசதியுடைய 2 பேருந்துகள் ஆட்சியரிடம் வழங்கல்! - தஞ்சாவூர் அண்மைச் செய்திகள்

தஞ்சாவூர்: தாமரை பன்னாட்டுப் பள்ளியின் சார்பில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பயன்பாட்டுக்காக ஆக்ஸிஜன் பொருத்திய இரண்டு பேருந்துகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன.

தஞ்சையில் ஆட்சியரிடம் வழங்கப்பட்ட 2 ஆக்ஸிஜன் வசதி கொண்ட பேருந்துகள்.
தஞ்சையில் ஆட்சியரிடம் வழங்கப்பட்ட 2 ஆக்ஸிஜன் வசதி கொண்ட பேருந்துகள்.

By

Published : May 20, 2021, 7:41 AM IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையைக் போக்கிட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உடனடியாக ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் இடத்திற்கே சென்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வகையிலான ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட இரண்டு பேருந்துகளை தாமரை பன்னாட்டுப் பள்ளியின் சார்பில் தாளாளர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவிடம் வழங்கினார்.

ஆக்ஸிஜன் வசதி கொண்ட 2 பேருந்துகள் ஆட்சியரிடம் ஒப்படைப்பு!

2 பேருந்துகளும் தலா நான்கு பேர் வீதம் ஆக்ஸிஜன் வசதி பெறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. டீசல், ஓட்டுநர் ஊதியம் உள்ளிட்ட செலவுகளையும் பள்ளி நிர்வாகமே பார்த்துக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார். தொற்று குறையும் வரை பேருந்தை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க : ’ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்ததற்கு நன்றி’ - அற்புதம்மாள்

ABOUT THE AUTHOR

...view details