தஞ்சாவூர்:கும்பகோணம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆருரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 30-ம் தேதி முதல் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று (டிசம்பர் 7) 8-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி எருமை மாட்டிடம் மனு அளித்து போராட்டம் நடைபெற்றது. இதுவரை ஆலை நிர்வாகமோ, தமிழக அரசோ கண்டு கொள்ளாத நிலையில், 9-வது நாளான இன்று (டிசம்பர் 8) தங்களது கோரிக்கைகளை பறை அடித்து, தண்டோரா போட்டு வலியுறுத்தினர்.