கருப்புக் கொடி போராட்டம் கைவிடல்: முதல்வரிடம் மனு அளித்த ஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்த தமிழக முதல்வரிடம் திருமண்டங்குடி திரு ஆருரான் தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.
பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடியில் திரு ஆருரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 120 கோடி, கரும்பு விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன் ரூபாய் 300 கோடி , விவசாயிகள் பணத்தை ஆலை நிர்வாகம் பிடித்தம் செய்து கொண்ட தொகை ரூபாய் 40 கோடி, விவசாயிகளுக்காக, கூட்டுறவு சங்கங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 8 கோடி என மொத்தம் ரூபாய் 468 கோடி ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
மேலும், திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிவாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் எனபன பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை அருகே கரும்பு விவசாயிகள், 268 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஆன்மீக ஆட்சிதான் நடக்கிறது - தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம்
அதனைத்தொடர்ந்து, போராட்டம் தொடர்பாக, கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கடந்த மே 08 ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட்டனர். இந்நிலையில் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வருக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட என கரும்பு விவசாயிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக கரும்பு விவசாயிகளிடம் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி முதல்வரை சந்தித்து மனு அளிப்பதற்கு ஏற்பாடுகளை செய்தனர்.
இந்நிலையில், கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி போராட்டத்தை கைவிட்டு மனு அளிக்க முடிவு செய்தனர். அதனிடையே சாலியமங்கலத்திற்கு பிற்பகல் வந்த தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க காசிநாதன் தலைமையிலான கரும்பு விவசாயிகள் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.
மேலும், விவசாயிகளின் பிரச்சனையினை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொடர்ந்து கரும்பு விவசாயிகள் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க காசிநாதன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: INDIA கூட்டணியினரை குண்டு கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!