தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள எட்டுப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 6 பேர், கரோனா ஊரடங்கு சமயத்தில், அங்கிருந்த வனப்பகுதியில் வலை விரித்து காட்டு முயல்களை வேட்டையாடியுள்ளனர்.
பின்னர், அங்குள்ள வயல் காட்டில் வேட்டையாடிய முயலை சமைத்து விருந்து நடத்தி உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில், தாங்கள் செய்யும் தவறை உணராத அவர்கள், இதனை படம் பிடித்து டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பால், வனவர் ராமதாஸ் மற்றும் வனத்துறை ஊழியர்கள், மாணவர்கள் 6 பேரையும் கொத்தாக அள்ளிச் சென்றனர்.