தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: விழிப்புணர்வு பாடலை பாடிய மாணவி - விழிப்புணர்வு பாடலை பாடிய மாணவி

தஞ்சையில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பாடலை மாணவி பாடி அசத்தினார்.

விழிப்புணர்வு பாடலை பாடிய மாணவி
விழிப்புணர்வு பாடலை பாடிய மாணவி

By

Published : Dec 25, 2022, 11:32 AM IST

விழிப்புணர்வு பாடலை பாடிய மாணவி

தஞ்சாவூர்: வல்லம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி கனிமொழி. இவர் தனது குரல் வளத்தால் விவசாயம், பெண்கள் நிலை, அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து பாடல் பாடி அசத்தி வருகிறார்.

கனிமொழிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி, சக மாணவிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தனது தந்தையை விபத்தில் இழந்து, தாயின் அரவணைப்பில் படித்து வருகிறார் கனிமொழி.

இசை பயிற்சி பெறாத கனிமொழி மெட்டுகளை உள் வாங்கிக் கொண்டு பாடல் பாடி அசத்துகிறார். விவசாயம் எப்படி அழிக்கப்படுகிறது போன்ற 15-க்கும் மேற்பட்ட கண்ணீர் வரவழைக்கும் வகையிலான பாடல்களை கனிமொழிபாடியுள்ளார்.

இதையும் படிங்க: மதுவை ஒழிக்க 'பாமக 2.O' ஆரம்பம்: அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details