தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் வைஷியா(17). இவர் இசபெல்லா மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றுள்ளார். பள்ளி வகுப்பு முடித்த பிறகு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் நீட் தேர்வை எழுதியுள்ளார்.
நீட் தேர்வில் தோல்வியடைந்த மற்றொரு மாணவி தற்கொலை - தீக்குளித்து தற்கொலை
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
neet
இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. வைஷியா நீட் தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
தோல்வி அடைந்து விரக்தியில் இருக்கும் மாணவர்கள், மருத்துவர் ஆலோசனைக்கு 044-24640050, 914424640050 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.