தஞ்சாவுர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் நகராட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். "தூய்மை இந்தியா" திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தர வேண்டும் என்று துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் நகரம் முழுவதும் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்க வேண்டும்.
துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம் - தஞ்சாவூர்
தஞ்சாவூர்: கும்பகோணம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் போதுமான ஊதியம் கிடைக்கவில்லை என்று திடீர் வேலைநிறுத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளரகள்
குப்பைகள் சேகரிப்பதற்காக துப்புரவு பணியாளர்கள் தற்போது தினமும் ஊதியமாக ரூ.245 பெற்று வருகின்றனர். இந்நிலையில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து தருவதால் வேலைப்பளு அதிகரித்திருப்பதாகவும், அதனால் தின ஊதியத்தை உயர்த்தி ரூ. 600 வழங்க வேண்டுமென்று துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Last Updated : Jun 10, 2019, 7:45 PM IST