தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளம் தோண்டும்போது காட்சியளித்த ஐம்பொன் நடராஜர் சிலை - அதிராம்பட்டினம் அருகே கண்டெடுப்பு

தஞ்சை: செப்டிக் டேங்கிற்கு பள்ளம் தோண்டும்போது கிடைத்த ஐம்பொன் சிலையை அகழ்வாராய்ச்சி துறை அலுவலர்கள் கைப்பற்றி ஆய்வு செய்துவருகின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை

By

Published : Sep 17, 2019, 9:47 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ளது வள்ளி கொல்லைக்காடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் செப்டிக் டேங்க் கட்டுவதற்கு பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது சுமார் நான்கரை அடி உயரம், 500 கிலோ எடைகொண்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை இருப்பது தெரியவந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடந்த அவர் உடனே அகழ்வாராய்ச்சி துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த அலுவலர்கள் சிலையை மீட்டு ஆய்வு செய்துவருகின்றனர். அந்த இடத்தில் மேலும் சிலைகள் இருப்பதால் தோண்டும் பணியை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை

இதேபோல் கடந்தாண்டு பஞ்சூர் என்ற இடத்தில் பள்ளம் தோண்டியபோது பத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிலை கண்டுப்பிடிக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் அகழ்வாராய்ச்சித் துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டி பூஜை; உருகும் தொண்டர்கள்!

ABOUT THE AUTHOR

...view details