தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கபடி...கபடி... ' - தஞ்சாவூர் போட்டியில் விறுவிறுப்பாக ஆடிய வீரர்கள் - இளைஞர்களால் நடத்தப்படும் மாபெரும் மாநில அளவிலான கபடி போட்டி

தஞ்சாவூர்: பழைய பேராவூரணியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கபடி போட்டியில் 27 அணிகள் பங்கேற்றுள்ளன.

kabadi competition
kabadi competition

By

Published : Jan 19, 2020, 1:04 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் பழைய பேராவூரணியில் மறைந்த நீலகண்டன் என்பவரின் நினைவாக 3ஆம் ஆண்டு சுழற்கோப்பைக்கான பிரமாண்ட கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை இளைஞர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து நடத்தினர். இந்தப்போட்டிக்கு பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

போட்டியில் கன்னியாகுமாரி, காடந்தங்குடி, நாகப்பட்டினம், சேலம், திருவாரூர், ஏனாதி, இராமநாதபுரம், கல்லக்கோட்டை, திருச்சி, கரூர், எடப்பாடி, மதுரை, புதுக்குளம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 27 அணிகள் கலந்து கொண்டனர். மிக மிக விறுப்பாக நடைபெற்ற கபடிப் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டியைக் காண 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் குவிந்தனர்.

துள்ளிக் குதித்து ஓடும் கபடி வீரர்

இந்த பிரமாண்ட கபடி போட்டி ஜனவரி 17ஆம் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details