தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடங்கியது தஞ்சை பெரிய கோயில் சித்திரைப் பெருந்திருவிழா! - தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் ரத்து

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. நிகழாண்டு தேரோட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

பெரிய கோயில் சித்திரைப் பெருந்திருவிழா
பெரிய கோயில் சித்திரைப் பெருந்திருவிழா

By

Published : Apr 9, 2021, 10:22 AM IST

தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் பெருவுடையார் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கடந்தாண்டு (2020) கரோனா பெருந்தொற்று பொதுமுடக்கம் காரணமாக சித்திரைப் பெருந்திருவிழாவும், தோரோட்டமும் நடைபெறவில்லை.

தஞ்சை பெரிய கோயில்

இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைப் பெருந்திருவிழா இன்று (ஏப். 9) காலை தொடங்கியது. அப்போது, மேளதாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. ஆனால், ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருந்த தேரோட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

பெரிய கோயில் சித்திரைப் பெருந்திருவிழா

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 2015ஆம் ஆண்டுமுதல் நடைபெற்றுவந்த தேரோட்டம் கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டும், நிகழாண்டும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதால் நாளைமுதல் கோயில் திருவிழாக்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது. இருப்பினும், நிபந்தனைகளுக்குள்பட்டு புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details