தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஸ்டாலின் தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்' - பாஜக ஊடகப் பிரிவு தலைவர் பிரசாத்

தஞ்சாவூர்: குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மக்களிடையே பொய் பிரசாரம் செய்து ஸ்டாலின் தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்த நினைக்கிறார் என்று பாஜக ஊடகப் பிரிவு தலைவர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக, bjp
பாஜக, bjp

By

Published : Mar 6, 2020, 12:00 AM IST

பாஜகவின் மாநில ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத் இன்று தஞ்சையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையும் பறிக்கக்கூடியது அல்ல. மத்தியில் இனி ஆட்சிக்கு வரப் போவதில்லை என்ற காரணத்தினால் காங்கிரஸ் கட்சியானது தேசிய அளவிலும், மாநில அளவில் திமுகவும் மக்களிடையே பொய் பிரச்சாரங்களைச் செய்து அவர்களைப் போரட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர்.

அதிலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இஸ்லாமிய பயங்கரவாதிகளைத் தூண்டிவிட்டு அப்பாவி இஸ்லாமியர்களைப் போராட்டத்தில் ஈடுபட வைக்கிறார். நாடாளுமன்றத்திலும், எம்பிக்கள் மூலம் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாத நேரங்களில் விவாதிப்பதை விட்டுவிட்டு மக்களைத் தூண்டி விடுகின்றனர். இனி இந்தச் சட்டத்தை மாற்ற முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பயன்கள் குறித்து பிரதமர் மோடி, அமித் ஷா தெளிவாக விளக்கியுள்ளனர். மக்களும் இதைப் புரிந்து கொண்டுள்ளனர்.

பாஜக மாநில ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத் பேட்டி

ஆனால் எதிர்க்கட்சிகள்தான் மக்கள் மனதில் விஷத்தை பரப்பியுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்தியர்கள், தமிழர்கள் என யாரும் பாதிக்கப்பட போவதில்லை. திமுக சார்பில் கோலமிட்டு போராட்டம் நடத்திய வழக்கில் தமிழ்நாடு அரசு ஸ்டாலினுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.

ஸ்டாலின் கைது செய்யப்பட வேண்டிய நபர். அவர் டெல்லி கலவரம் போல் தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால், இதனைத் திறமையாக தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் போல காங்கிரஸும் திமுகவும் கரையும்” என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details