தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நடுத்தர மக்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் என பலதரப்பட்ட மக்கள் வசித்துவரும் நிலையில் கடந்த பல மாதங்களாக நகரின் மையப் பகுதிகளில் கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது. ஒரு பக்கம் இப்பகுதியில் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் மறுபுறம் நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கும் இந்த கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகமாகி பொதுமக்கள் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த கழிவுநீரை அப்பறப்படுத்த பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. அதுமட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் இருக்கும் மரங்களை வெட்டி சாய்த்து அப்புறப்படுத்தி வரும் செயல்களில் அலுவலர்கள் ஈடுபடுவது மக்களை வேதனையடைய செய்கிறது.