இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இலங்கை குண்டுவெடிப்பு: மௌன அஞ்சலி பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுப்பு
தஞ்சாவூர்: இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பட்டுக்கோட்டையில் இன்று நடைபெறவிருந்த மௌன அஞ்சலி பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
மௌன அஞ்சலி பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுப்பு
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தஞ்சாவூர் மாவட்டம் கிறிஸ்தவ சபைகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக இன்று மாலை மாதா கோயில் தெருவில் மௌன அஞ்சலிப் பேரணி நடக்கவிருந்தது.
இந்நிலையில், இந்தப் பேரணிக்கு காவல் துறையினர் திடீரென மறுப்பு தெரிவித்தனர். பேரணியில் கலந்து கொள்ள வந்தவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.