தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் ரத சப்தமி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ரத சப்தமி என்பது சூரியன், தனது தேரினை தக்க்ஷிண பாகத்திலிருந்து உத்தர பாகத்திற்கு திருப்பி செலுத்துவதாகும்.
இந்த தினத்தில் பெருமாளை வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்நிலையில் கும்பகோணத்திலுள்ள ஸ்ரீ சக்ரபாணி சுவாமி கோயில் உள்பட பல்வேறு பெருமாள் கோயில்களில் இந்த வழிபாடு நடைபெற்றது.