தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயற்கை வேளாண்மைக்கு விரைவில் புவிசார் குறியீடு:  ராமகிருஷ்ணன் எம்எல்ஏ - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நஞ்சில்லா இயற்கை வேளாண்மைக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இயற்கை வேளாண்மை: விரைவில் புவிசார் குறியீடு
இயற்கை வேளாண்மை: விரைவில் புவிசார் குறியீடு

By

Published : Dec 21, 2022, 12:13 PM IST

இயற்கை வேளாண்மை: விரைவில் புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழு உறுப்பினர்களாக கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், மேலூர் பெரியபுள்ளான் (எ) செல்வம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, கங்கவல்லி நல்லதம்பி ஆகிய நான்கு பேர் நியமிக்கப்பட்டனர். கும்பகோணம் சுவாமி மலையில் அமைந்துள்ள பூம்புகார் நிறுவனத்தின், பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தை இக்குழு நேற்றிரவு (டிச. 20) நேரில் பார்வையிட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இக்குழுவின் தலைவர் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், தஞ்சை மாவட்டம் கலை அம்சங்கள் நிறைந்த பகுதி. தமிழ்நாடு இதுவரை 50 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்றுள்ளன. அதில் 10 பொருட்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தது பெருமை என தெரிவித்தார்.

அதில் தஞ்சாவூர் தட்டு, தஞ்சாவூர் வீணை, நாச்சியார்கோயில் குத்துவிளக்கு, சுவாமிமலை பஞ்சலோக சிலைகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கதாகும் என்றார். தமிழ்நாடு கைவினைப் பொருட்களை உலகறிய செய்திடவும், அதனை உருவாக்கும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் கடந்த 1973 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது பூம்புகார் நிறுவனம் என நினைவு கூர்ந்தார்.

பஞ்சலோக சிலைகள் ஏற்றுமதி அதிகரித்து தான் வருகிறது என்றும் இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். இங்குள்ள கைவினை கலைஞர்கள் சார்பில் தங்களுக்கு மாதாந்திர ஊதியமாக வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது நியாயமான கோரிக்கை, முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

மேலும் நஞ்சில்லா இயற்கை வேளாண்மைக்கு விரைவில் புவிசார் குறியீடுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் குஸ்தி.. பாஜகவின் வியூகம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details