தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணத்தில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை பெயரளவில் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

கும்பகோணம் மாநகரில் உணவுப்பண்டங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படாததால் மக்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உணவு பாதுகாப்புத் துறையினரை முடுக்கி விட வேண்டும் என மாமன்ற உறுப்பினரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கும்பகோணம் மாநகரில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை பெயரளவில் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
கும்பகோணம் மாநகரில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை பெயரளவில் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

By

Published : Jul 3, 2022, 5:32 PM IST

கும்பகோணம்: தற்போது மாம்பழ சீசன் என்பதால், அதிக அளவில் பலவிதமான மாம்பழங்கள் தெருவோரக் கடைகள் முதல் பிரத்யே சூப்பர் மார்கெட் வரை அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் பல மாம்பழங்கள் ரசாயனக் கற்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டதாகவே உள்ளது. அதுபோலவே, வாழைப்பழங்களும் பல ஊர்களில் பழுக்க வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்கள் குறித்து கும்பகோணம் பகுதியில் சோதனைகள் மேற்கொண்டதாகவோ, தவறான முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவோ இதுவரை தகவல் இல்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.

இதுகுறித்து, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர், கவிஞர் ச.அய்யப்பன் மற்றும் சமூக ஆர்வலர் கா.பாலா ஆகியோர் கூறுகையில், 'தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினரின் சோதனை என்பது பெயரளவிலேயே நடக்கிறது. ஒன்று இரண்டு உணவகங்களை சோதனை செய்து விட்டு அத்துடன் தங்கள் பணி முடிந்துவிட்டதாக கிளம்பி விடுகின்றனர். ஆனால், கும்பகோணத்தில் உள்ள ஒரு சில உணவகங்களைத் தவிர ஏனைய உணவுக்கூடங்கள் சுத்தமாக உள்ளதா சுகாதாரமாக உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

காலாவதியான உணவு பண்டங்கள், பாக்கெட் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், கெட்டுப்போன இறைச்சிகள் என பட்டியல் நீளும். அதுபோலவே தடை செய்யப்பட்ட ரசாயன வண்ணப்பொடிகள் இனிப்பகங்களில் பயன்படுத்தப்படுகிறது. உணவகங்கள், இனிப்பகங்களில் இன்னமும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தொடர்கிறது. அதில் ஸ்டேப்ளர் பின்கள் போடுவதும் நடக்கிறது.

ஷவர்மா போன்ற உணவினால் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், உணவுப் பாதுகாப்புத்துறையினர், பொதுமக்களின் உயிர் மீது அலட்சியம் காட்டாமல், உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்து, அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்திட தஞ்சை மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்புத்துறையினரை முடுக்கி விடவேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணத்தில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை பெயரளவில் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

இதற்கிடையே இன்று தஞ்சை மாவட்ட உணவுப்பாதுகாப்பு அலுவலர் மரு. சித்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர், தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை 2ஆவது முறையாக விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் கும்பகோணம் புதிய ரயில்நிலையம் எதிரே உள்ள கடைக்குப் பூட்டிச் சீல் வைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு சில உணவகங்களில் ஆய்வு செய்து அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ததை அடுத்து, அவர்களை எச்சரித்து அபராதமும் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததில் 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்



ABOUT THE AUTHOR

...view details