தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது! - tanjore news in tamil

POCSO Act: கும்பகோணம் அருகே பள்ளி மாணவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்ற 53 வயது முதியவரை, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

-pocso-act
-pocso-act

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 1:26 PM IST

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே 53 வயது முதியவர் ஒருவர் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு எட்டாம் வகுப்பு பயிலும் 13 வயது பள்ளி மாணவர் ஒருவர் அடிக்கடி டீ மற்றும் தின்பண்டங்கள் வாங்கச் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி பள்ளி மாணவர், வழக்கம் போல் அவரது கடைக்குச் சென்றபோது, அந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்ற அந்த நபர், சிறுவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்று உள்ளார். இது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தை இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:காதலியை கொலை செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்.. சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!

இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது முதியவர், சிறுவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள போலீசார் அவர் வேறு சிறுவர்கள் யாருக்காவது தொந்தரவு தந்துள்ளாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே போலி நாட்டு வைத்தியர் கேசவ மூர்த்தி ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் இரு இளைஞர்களை படுகொலை செய்துள்ள நிலையில், மீண்டும் ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் 53 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நெல்லையில் மர்ம நபர்களால் இளைஞர் வெட்டி படுகொலை.. போலீசார் தீவிர நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details