கும்பகோணம்: அடுத்துமேலக்காவேரி முகைதீன் ஆண்டவர் (எ) ஜாமியா மஸ்ஜித்தில், நாட்டின் பவள விழா சுதந்திர தின நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தலைவர் முகமது அபுபக்கர் தலைமையில், சுதந்திரப்போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு அவர்களது முன்னிலையில், தலைமை இமாம் கே. ஜாபர் சாதிக் நூரிய்யி தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.
கும்பகோணம் அருகே ஜாமியா மஸ்ஜித்தில் சுதந்திர தினவிழா கொடியேற்றம் - கும்பகோணம் மேலக்காவேரி
கும்பகோணம் மேலக்காவேரி முகைதீன் ஆண்டவர் எ ஜாமியா மஸ்ஜித்தில் ஏழுபத்து ஐந்தாவது சுதந்திர தினவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
ஜாமியா மஸ்ஜித்தில் ஏழுபத்து ஐந்தாவது சுதந்திர தினவிழா கொடியேற்றம்
தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றிப் பாராட்டும் வகையில், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அவரது வாரிசுதார்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில், ஜாமியா, மஸ்ஜித் செயலாளர் ஹாஜி முகமது, பொருளாளர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் ஜகபர் சாதிக், துணைச்செயலாளர் ஜாபர் பாட்ஷா, துணை இமாம் நூருல் ஹாதி ஹஜ்ரத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதையும் படிங்க:ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தேசிய கொடி ஏற்றினார் ராமோஜி ராவ்
Last Updated : Aug 15, 2022, 6:03 PM IST