தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவையாறில் ஏழு வீடுகள் இடிந்து சேதம்! - Thiruvaiyaru Purevi Storm Damage

தஞ்சாவூர்: திருவையாறு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக 7 வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன.

திருவையாறில் ஏழு வீடுகள் இடிந்து சேதம்  திருவையாறு புரெவி புயல் பாதிப்பு  திருவையாறு மழை பாதிப்பு  Thiruvaiyaru Rain Damage  Thiruvaiyaru Purevi Storm Damage  Seven houses destroyed in Thiruvaiyar by Purevi Storm
Thiruvaiyaru Purevi Storm Damage

By

Published : Dec 3, 2020, 9:18 PM IST

'புரெவி' புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்த மழையினால், பெரமூர், திருப்பழனம், வளப்பக்குடி, கடுவெளி, நடுக்காவேரி ஆகிய கிராமங்களில் தலா ஒரு வீடும், கண்டியூர் கிராமத்தில் 2 வீடும் இடிந்து சேதமாகி உள்ளது.

4 மணி நிலவரப்படி, திருவையாறில் 64 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல், வயல்வெளிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த மழை தொடர்ந்து நீடித்தால், நெற்பயிர்கள் அனைத்து அழுகிவிடும் நிலை ஏற்படும். திருவையாறு பகுதியில் நேற்று முழுவதும் விடாமல் மழை பெய்துகொண்டே இருந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சாலையோரக் கடை வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெற்றிலைகொடி, வாழை, தினக்கூலி தொழிலாளிகள் மழையினால் வேலைக்குச் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:திருவையாறு தாலுகாவின் 6 பாதுகாப்பு மையங்களில் 321 பேர் தங்கவைப்பு

ABOUT THE AUTHOR

...view details