தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பெருவுடையார் கோயில் குடமுழுக்கு முழுமையான வெற்றியல்ல' - சீமான் - தஞ்சையில் சீமான்

தஞ்சை: பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தியது முழுமையான வெற்றியல்ல என்றும்; அனைத்து தமிழ் கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்துவதை நோக்கிச் செல்வது தான் முழுமையான வெற்றி எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

seeman participated in thanjavur temple kudamulugu  semman in thanjavur  தஞ்சையில் சீமான்  அ
பெருவுடையாரை தரிசித்த சீமான்

By

Published : Feb 5, 2020, 9:13 PM IST

தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு குடமுழுக்கு விழா தமிழிலும் நடைபெற்றது. இவ்விழாவில், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு பெருவுடையாரைத் தரிசித்தார்.

இதன் பின்பு நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பெருவுடையார் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தியுள்ளதை முழுமையான வெற்றியாக கொள்ளமுடியாது. தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பது பல ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாக இருந்து வந்துள்ளது. தமிழில் எப்போதோ குடமுழுக்கு நடத்தியிருக்கவேண்டும்.

பெருவுடையாரைத் தரிசித்த சீமான்

பல்வேறு சட்டப்போராடங்களுக்குப் பிறகு இந்தநிலையை வந்தடைந்துள்ளோம். இதில் கூட நீதிமன்றம் குறிப்பிட்ட அளவிற்கு இங்கு குடமுழுக்கு நடத்தப்படவில்லை. அனைத்து தமிழ்கோயில்களிலும் தமிழில் வழிபாடு நடத்துவதை நோக்கிச் செல்வோம். அதற்கு இது ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு அரசியல் புரிதல் இல்லை - உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details