தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் - பணம் செலுத்தாத கடைகள் சீல்

தஞ்சாவூர்: வாடகை செலுத்தாத கடைகளுக்கு பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

வாடகை செலுத்தாத கடைக்கு சீல் வைக்கும் காட்சி
வாடகை செலுத்தாத கடைக்கு சீல் வைக்கும் காட்சி

By

Published : Mar 16, 2020, 11:09 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கட்டிடத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன.

இந்த வணிக வளாகங்கள் முறையாக நகராட்சி நிர்வாகத்திற்கு வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு பலமுறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும், நேரில் சென்று வாடகை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மின்சாரத்துறை அதிகாரிகள் ஆகியோர்கள் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு, நேரடியாக சென்று வசூல் செய்ததில் பல லட்சங்கள் வசூலானது.

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

மேலும், நேரடியாக சென்றும் பணம் செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் அபராதம் எவ்வளவு?

ABOUT THE AUTHOR

...view details