தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சையில் வயலில் இறங்கிய பள்ளி வேன்: 7 குழந்தைகள் படுகாயம்! - thanjavur current news

தஞ்சாவூர் அருகே நிலை தடுமாறிய பள்ளி வாகனம் வயலில் இறங்கிய விபத்தில் 7 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

வயலில் இறங்கிய பள்ளி வாகனம்.. 7 குழந்தைகள் படுகாயம்
வயலில் இறங்கிய பள்ளி வாகனம்.. 7 குழந்தைகள் படுகாயம்

By

Published : Nov 28, 2022, 3:30 PM IST

தஞ்சாவூர்:பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்குச் சொந்தமான வேன், வழக்கம்போல் இன்று காலை குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அதம்பை என்ற இடத்தில் வேன் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் வயலுக்குள் இறங்கியது. இதில் வேனில் இருந்த ஏழு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து காயமடைந்த குழந்தைகள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இங்கு முதலுதவி பெற்ற குழந்தைகள், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கால்வாயில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து

ABOUT THE AUTHOR

...view details