தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் உள்ள தூய்மைப் பணியாளர்கள், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தற்காலிகமாகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை, நிரந்தர அரசுப் பணியாளர்களாக மாற்ற வேண்டும், ரூ.50 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 250 கோரிக்கைகளைப் போராட்டத்தில் முன்வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து நூதன முறையில் பதாகைகளை கைகளில் ஏந்தி அமைதியான முறையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் தமிழக மக்கள் உரிமை கூட்டமைப்பினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தஞ்சையில் டெல்லி மாநாட்டிற்குச் சென்ற 16 பேர் கண்டுபிடிப்பு...!