தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆஷாட நவராத்திரி.. ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு சந்தன அலங்காரம்! - தஞ்சாவூர் செய்திகள்

உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவில் சந்தன அலங்காரம் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு சந்தன அலங்காரம்!
ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு சந்தன அலங்காரம்

By

Published : Jun 22, 2023, 3:17 PM IST

ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு சந்தன அலங்காரம்

தஞ்சாவூர்: பெரிய கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்தக் கோயிலின் தனி சந்நிதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். மேலும், மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும். வேறு எங்கும் நடைபெறுவது இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரியின் 21ஆம் ஆண்டு பெருவிழா தஞ்சை பெரியகோயிலில் கடந்த ஜூன் 18ஆம் தேதி ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், ஸ்ரீ மஹா கணபதி அபிஷேகம், ஸ்ரீ மஹா வாராஹி அபிஷேகம் ஆகியவற்றுடன் சிறப்பாகத் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், சந்தன அலங்காரம், தேங்காய் பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதானிய அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், கனி வகை அலங்காரம், காய்கறி அலங்காரம், புஷ்ப அலங்காரம் என தினமும் அபிஷேகமும் பல்வேறு அலங்காரங்களும் சிறப்பாக செய்யப்பட்டு, விஷேச தீபாராதனையும் நடைபெற்று வந்தது.

மேலும், அதனைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா மற்றும் பூச்சொரிதலும் நடைபெற உள்ளது. மேலும் தினந்தோறும் மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நந்தி மண்டபத்தில் நடைபெறுகிறது. ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிந்து வருகின்றனர். அதைப் போல் முதல் நாள் 18 ஆம் தேதி அன்று சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சுமார் 100 கிலோ கொண்ட இனிப்பு வகைகளால் இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் விழாவில் ஜூன் 19ஆம் தேதி அன்று ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. அதைப்போல் மூன்றாம் நாள் கடந்த 20ஆம் தேதி அன்று ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு குங்குமம் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனையும் காட்டப்பட்டது.

மேலும் மத்திய அரசின் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நந்தி மண்டபத்தில் தவில் உலக சக்ரவர்த்தி கலைமாமணி சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற குரு டி.ஆர்.கோவிந்த ராஜன் அவர்கள் வழங்கும் லய நாத இன்பம், வடுவூர் கிருஷ்ணமூர்த்தியின் நாதஸ்வரம், சாலியமங்கலம் ராம்தாஸின் வீணை, சின்னமனூர் வீரமணியின் சாக்ஸ போன், தஞ்சை சங்கரசுப்ரமணியனின் மிருதங்கம் ஆகிய குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நேற்று ஜூன் 21ஆம் தேதி ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு சந்தன அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டும், இசை நிகழ்ச்சியைக் கண்டும் ரசித்தனர்.

இதையும் படிங்க:ஆஷாட நவராத்திரி விழா: மஞ்சள் அலங்காரத்தில் தஞ்சை பெரிய கோயில் வாராஹி அம்மன்

ABOUT THE AUTHOR

...view details