தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் கொள்ளையர்கள் கைது - தாசில்தார் அதிரடி - sand theft in thirukkattupalli

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே வெண்ணாற்றில் அரசு அனுமதியின்றி மணல் திருடியவர்களை தாசில்தார் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

மணல் கொள்ளையர்கள்
மணல் கொள்ளையர்கள்

By

Published : Mar 20, 2020, 11:35 PM IST

திருக்காட்டுப்பள்ளி அருகே கச்சமங்கலம் வெண்ணாற்றில் அரசு அனுமதியின்றி பொக்லைன் உதவியுடன் மணல் கடத்திக் கொண்டிருந்தனர்.

அச்சம்பவ இடத்திற்கு வந்த பூதலூர் தாசில்தார் சிவக்குமார், மணல் ஏற்றிக் கொண்டிருந்த ஒரு டிராக்டர் மற்றும் ஒரு பொக்லைனை பிடித்ததுடன், அதன் ஓட்டுநர்கள் இருவரையும் பிடித்து தோகூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

மணல் கொள்ளையர்கள்

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து அதன் ஓட்டுநர்களான ரமேஷ், ரத்தினவேல் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: 7 பேர் விடுதலை: விசாரணை அறிக்கையைப் பொறுத்தே ஆளுநரின் முடிவு!

ABOUT THE AUTHOR

...view details