தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சேதுபாவாசத்திரம் பகுதி பாரதத்தாய் இளைஞர் நற்பணி மன்றம், 28 ஆண்டுகளாக பாய்மர படகுப் போட்டி நடத்தி வருகிறது. இந்நிலையில் 29ஆவது ஆண்டு படகுப்போட்டியை சேதுபாவாசத்திரம் படகுகள் இறங்குதளத்தில் இன்று நடைபெற்றது.
இதில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் 22 படகுகளில் 10 பேர் வீதம் இன்ஜின் பொருத்தப்படாத பாய் மரத்தின் மூலம் செல்லும் வகையிலான பாய்மர படகுகளே பங்கேற்றன.
கடற்கரையிலிருந்து இரண்டு பாகத் தொலைவுக்குச் (இரண்டு நாட்டிகல் மைல்) சென்று மீண்டும் கரை திரும்பும் வகையில் போட்டி அமைக்கப்பட்டது. மொத்தம் நான்கு பாகஅளவு தூரம் கொண்ட இந்த போட்டியில் மீனவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.