தஞ்சாவூர்:இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் 66ஆவது நினைவு நாள் இன்று (டிச.6) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் கும்பகோணம் மாநகரில் உள்ள நாகேஸ்வரன் கீழ வீதி, பாலக்கரை மற்றும் காந்தி பூங்கா உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இந்து மக்கள் கட்சியினர் சார்பில் விபூதி பூசியவாறும், காவிச் சட்டை அணிந்தவாறும் உள்ள அம்பேத்கர் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் அந்த போஸ்டரில், ‘காவி(ய)த் தலைவனின் புகழை போற்றுவோம்’ என சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. ஏற்கெனவே திருவள்ளுவர் சிலைக்கும், பெரியார் சிலைக்கும் காவித்துண்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல், தற்போது அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கும் விபூதி பூசி காவிச்சட்டை அணிந்தவாறு ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் செய்தி தீயாக பரவியதைத் தொடர்ந்து கும்பகோணம் நகரின் பல்வேறு இடங்களில் இருந்த போஸ்டர்கள் காவல் துறையினரால் கிழித்து அகற்றப்பட்டது. இருப்பினும், சர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி பதற்றத்தை ஏற்படுத்திய இந்து மக்கள் கட்சியைக் கண்டித்தும், அதன் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் மாநிலச் செயலாளர் குருமூர்த்தி ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், நீலப்புலிகள் இயக்கத்தினர், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியினர் என நூற்றுக்கணக்கானோர் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் அவர்கள் ஊர்வலமாக திரண்டு கும்பகோணம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்து, அர்ஜூன் சம்பத் மற்றும் குருமூர்த்தியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி, அங்கேயே முற்றுகையிட்டு தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கும்பகோணம் டிஎஸ்பி அசோகன், “சர்சைக்குரிய சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் குருமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.