தஞ்சாவூர்:கும்பகோணம் மாநகரில் உள்ள லட்சுமி விலாஸ் அக்ரஹாரம், பாணாதுறை திருமஞ்சன வீதி, நால்ரோடு, பாலக்கரை, மடத்துத்தெரு, பெரிய கடைவீதி, மகாமககுளம் உள்ளிட்ட பல இடங்களில் குறிப்பிட்ட ஒரு போஸ்டர், அகில இந்திய புரபஷ்னல் காங்கிரஸ் - தமிழ்நாடு என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ளது.
காணவில்லை என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், காவி நிறத்தில் உள்ள ஒருவரின் நிழல் படம் உள்ளது. மேலும் அதில், "டாலரை 40 ரூபாய்க்கு கொண்டு வருவாங்க என சொன்ன நபரை தேடுகிறோம்" என எழுதப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த போஸ்டர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.