தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாளில் கண்ணை கவரும் வகையில் கோலப்போட்டி - etv bharat tamil

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணம் மாநகராட்சியில் மாபெரும் வண்ண கோலப்போட்டி நடைபெற்றது.

MGR பிறந்தநாளை முன்னிட்டு விழிப்புணர்வு கோலப்போட்டி: ஆர்டிஐ
MGR பிறந்தநாளை முன்னிட்டு விழிப்புணர்வு கோலப்போட்டி: ஆர்டிஐ

By

Published : Jan 17, 2023, 1:00 PM IST

MGR பிறந்தநாளை முன்னிட்டு விழிப்புணர்வு கோலப்போட்டி

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி 19ஆவது வட்டம் பாணாதுறை பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களிடையே தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ண கோலப்போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, 1 மணி நேரத்தில் 50 வண்ணமிகு ரங்கோலி கோலங்களை தீட்டி அசத்தினர். அதில் பல கோலங்கள் காண்போரை வியக்க வைத்தது. இதனை கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ இராமநாதன், அதிமுக ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், 19ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் ஆதிலட்சுமி இராமமூர்த்தி உள்ளிட்டோர் தொடங்கி வைத்திருந்தனர்.

இந்த கோலங்களை 5 பேர் கொண்ட நடுவர் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் மிக சிறந்த 3 கோலங்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கி பாராட்டப்பட்டது.

இதையும் படிங்க: பஞ்சாப் போலீசாரால் ஓராண்டாக தேடப்பட்ட தலைமறைவு குற்றவாளி கைது

ABOUT THE AUTHOR

...view details