தஞ்சாவூர்:பேராவூரணியில் ஆடி, ஆவணி மாதங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மொய் விருந்து நடத்தப்படுகிறது. தனியாக நடத்தப்பட்ட இந்த மொய் விருந்து தற்போது வீட்டில் விசேஷம் வைத்திருப்பவர்கள் 4 அல்லது 5 பேர் சேர்ந்து மொய் விருந்து நடத்துகின்றனர். அதன்படி பேராவூரணியில் இன்று (ஆக.25) நடத்தப்பட்ட மொய் விருந்தில் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி விருந்து நடத்தி, அதில் சுமார் ரூ. 11 கோடி மொய் பணம் வசூலாகி உள்ளது.
கமகமக்கும் கறிச்சாப்பாடு, மணமணக்கும் சாம்பார் சாப்பாடு என 15 ஆயிரம் பேருக்கு மேல் விருந்து கொடுக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மொய் விருந்து மூலம் கிடைக்கும் வருவாயில் திருமணம், வீடு கட்டுதல், கல்விச்செலவு, விவசாயம் போன்ற சுப காரியங்களை மக்கள் செய்கின்றனர்.