தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூரில் ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் - cannabis benifits

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான 250 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

rs-2-crore-worth-of-cannabis-seized-in-thanjavur
rs-2-crore-worth-of-cannabis-seized-in-thanjavur

By

Published : Feb 16, 2022, 7:39 PM IST

தஞ்சாவூர்:ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வழியாக இலங்கைக்கு பெருமளவில் கஞ்சா கடத்தப்படுவதாக தஞ்சை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவலர்கள், தஞ்சை சரகத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சியிலிருந்து வந்த லாரியில் 200க்கும் மேற்பட்ட கஞ்சா மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்த காவலர்கள் லாரியில் வந்த இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று கார்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து காவலர்கள் தரப்பில், பறிமுதல் செய்யப்பட்ட 250 கிலோ கஞ்சாவின் மதிப்பு 2 கோடி ரூபாய். இதுதொடர்பாக வெள்ளையன், கணபதி, நாகராஜ், முருகன், ராஜா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனிவாசா உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கஞ்சா மூட்டைகளை நாகப்பட்டினம் வழியாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டுருந்தனர் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஒரே நாளில் 110 கிலோ கஞ்சா பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details