தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Robbery: வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளை - பட்டுக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

Robbery: பட்டுக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், இரண்டு லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

By

Published : Dec 25, 2021, 9:35 AM IST

Robbery: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா. இவர் தனியார் பள்ளியில் வேலை பார்த்துவருகிறார். இவரது கணவர் பழனிவேல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மகன் சுரேந்தர் சென்னையில் படித்துவருகிறார். இந்த நிலையில் ஸ்ரீபிரியா நேற்று (டிசம்பர் 23) காலை 9 மணி அளவில் வீட்டின் கதவினைப் பூட்டிவிட்டு பள்ளிக்குச் சென்றுவிட்டார். மீண்டும் இரவு ஏழு மணிக்கு வந்து பார்த்தபோது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்றபோது, பீரோவிலிருந்த 40 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், இரண்டு லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து ஸ்ரீபிரியா பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் செங்கமல கண்ணன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுசெய்தனர். அப்பொழுது கொள்ளையர்கள் விட்டுச் சென்ற செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைக் காவல் துறையினர் கைப்பற்றி கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: Omicron scare: 'ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்பு - மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிருங்கள்' - ஸ்டாலின்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details