தமிழ்நாடு முழுவதிலும் 31ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தஞ்சாவூரில் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணியை வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் ஊர்க்காவல் படை வீரர்கள், காவல்துறையினர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று கரூரில் போக்குவரத்து காவல் துறையினர் சார்பில் நடத்தப்பட்ட சாலைப் பாதுகாப்பு குறித்த புகைப்பட கண்காட்சியை அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.