தஞ்சாவூர்:நாட்டாணிப் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (41), காண்டிராக்ட் வேலை செய்து வந்தார். இவரது நண்பர்கள் மருங்கையைச் சேர்ந்த சுதாகர் (27), அசூரமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (32).
இவர்கள் மூவரும் நேற்று (டிச.11) இரவு 2 மணியளவில் பிரசாத், சுதாகர் ஆகியோர் ஒரு காரிலும், சந்திரசேகர் ஒரு பைக்கிலும் தஞ்சாவூர் விக்கிரவாண்டி பைபாஸ் சாலையில் சென்று தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்டர் மீடியனில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கிச் சென்ற லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகியோர் மீது மோதியது. சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவர்கள் வாகனங்களின் மீதும் லாரி மோதியது.