தஞ்சாவூர், கும்பகோணம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களான தினேஷ்குமார், அருண், சூர்யா ஆகியோர் அதே பகுதியில் உள்ள அரசலாற்றில் இன்று குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஆழமானப் பகுதிக்குச் சென்றதால் மூவரும் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர்.
ஆற்றில் மூழ்கிய மாணவர்கள்; இருவர் மீட்பு, ஒருவர் மரணம் - தஞ்சாவூர், மூன்று மாணவர்கள், இருவர் மீட்பு, ஒருவர் மரணம்
தஞ்சாவூர்: ஆற்றில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![ஆற்றில் மூழ்கிய மாணவர்கள்; இருவர் மீட்பு, ஒருவர் மரணம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4317739-thumbnail-3x2-riv.jpg)
தஞ்சாவூர்
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், ஆற்றில் குதித்து அவர்களை மீட்டதில், தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அருண், சூர்யா ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் அரசு மருத்துவமனை
இதுகுறித்து நாச்சியார்கோயில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.