தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரிய கோயிலில் மாயமான 2 சிலைகளை மீட்ட பொன். மாணிக்கவேல் குழு! - தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் மீட்பு

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் பல வருடங்களுக்கு முன்பு மாயமான இரண்டு சிலைகளை பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்புப் பிரிவுக் குழுவினர் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்திலிருந்து மீட்டனர்.

tanjore

By

Published : Oct 6, 2019, 4:16 AM IST

தஞ்சை பெரிய கோயிலில் சுமார் இருநூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ராஜராஜ சோழன் சிலை, அவரது மனைவி பஞ்சவன் மாதேவி சிலை உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட சிலைகள் சில ஆண்டுகளுக்கு முன் மாயமானது.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் பொன். மாணிக்கவேல்தலைமையில் நடைபெற்ற விசாரணையில், ராஜராஜ சோழன் சிலை குஜராத் அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்டு தஞ்சை பெரிய கோயிலில் வைக்கப்பட்டது.

இதையடுத்து மற்ற சிலைகள் தீவிரமாக தேடப்பட்டுவந்த நிலையில், தற்போது தஞ்சாவூர் அரண்மனை கலைக்கூடத்தில் தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான சிவன் சிலையும், திரிபுராந்தகர் சிலையும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலில் மாயமான 2 சிலைகள்

இதுகுறித்து பொன். மாணிக்கவேல் கூறுகையில், ”மீட்கப்பட்ட இரண்டு ஐம்பொன் சிலைகளும் பல கோடி ரூபாய் மதிப்புள்ளதால் விரைவில் இந்தச் சிலைகளை தஞ்சை பெரிய கோயிலில் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:37 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வந்த நடராஜர் சிலை

ABOUT THE AUTHOR

...view details