தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள கள்ளப்புலியூரில் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளப்புலியூர் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி மன்றத் தலைவரிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
பின்னர் கள்ளப்புலியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பொதுமக்கள் அனுமதியோடு நிறைவேற்றப்பட்டன.
மேலும் தரமான தார்சாலைகள் அமைத்தல், திருமண மண்டபம் அமைத்தல், விளையாட்டுத் திடல் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க:விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் கீழடிக்கு சென்ற பொதுமக்கள்