தமிழ்நாட்டில் உள்ள சிறப்புமிக்க பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தந்த புவிசார் குறியீடு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞராகவும் இருந்து வருகிறார். இவர் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, சுவாமிமலை வெங்கல சிலை, தஞ்சாவூர் வீணை, திருபுவனம் பட்டுச் சேலை போன்ற 21க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் பெற்றுத் தந்துள்ளார்.
பாரம்பரிய நெல் வகைகளுக்கு புவிசார் குறியீடு! விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்த வழக்கறிஞர்!
தஞ்சாவூர்: சீரக சம்பா போன்ற பாரம்பரிய நெல் வகைகளுக்கு புவிசார் குறியீடு பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி லோகோ, தமிழ்நாடு மின் கழகம் நம்ம ஊரு மீன்கள் லோகோ ஆகியவற்றிற்கு வணிகக் குறியீடு சட்டத்தின் கீழ் பதிவு பெற்று தமிழ்நாட்டு அரசிடம் ஒப்படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து சீரக சம்பா போன்ற பாரம்பரிய நெல் வகைகளை புவிசார் குறியீடு பெறுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தற்போது பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிடச் செய்யும் விவசாயிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலம் விவசாயிகளின் அறுவடை செய்யும் பாரம்பரிய நெல் ரகங்களுக்கு புவிசார் குறியீடு பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.